அன்னலட்சுமிஇராஜதுரை:

பெயர்: அன்னலட்சுமி இராஜதுரை
புனைபெயர்: யாழ்நங்கை
பிறந்த இடம்: திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

படைப்பாற்றல்:  சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம்

படைப்புக்கள்:

குறுநாவல்கள்:

  • விழிச்சுடர்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • உள்ளத்தின் கதவுகள் - 1975
  • நெருப்பு வெளிச்சம் - 1984

கவிதைத்தொகுப்புகள்:

  • இருபக்கங்கள் - 1993

விருதுகள்:

  •  'தமிழ்மணி" விருது -  இந்துக் கலாசார அமைச்சு-  1992
  • சிறந்த பத்திரிகையாளருக்கான விருது -  1993

இவர் பற்றி:

  • 1957 இல் கலைச்செல்வி இதழில் கவிதைகள் எழுதியதன் மூலம் எழுத்துலகிற்கு அறிமுகமானவர். 1958 இல் தினகரன் இதழில் இவரது முதல் சிறுகதை வெளியானது. இவர் உலகச் சிறுகதைகள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.   1962-ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டவர்.   ஓவியத்துறையிலும் ஆசிரியர் தரரதரப் பத்திரம் பெற்றுக்கொண்டவரென அறியமுடிகிறது.  ஜோதி' வார இதழ், மித்திரன் வாரமலர் என்பவற்றின் பொறுப்பாசிரியராகவும் விளங்கியவர்.   வானொலி நாடகம், உரைச்சித்திரம், வானொலி மகளிர் நிகழ்ச்சி என்பவற்றை எழுதித் தயாரித்துப் பல பாராட்டுக்கள் பெற்றவர்.  மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொண்ட அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதிப் பாராட்டுப் பெற்றார்.  சிறந்த பேச்சாளி. சமுதாய ஒழுங்கீனங்கள், பண்பாட்டுச் சரிவுகள் என்பனவற்றுக்கு வன்மையான எதிர்க்குரலாக அன்னலட்சுமி இராஜதுரையின் எழுத்துக்கள் அமைந்தன.


Copyright© 2009, Tamilauthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil authors (தமிழ் ஆதர்ஸ்).